மாத திருவோண விரதம்:
திருவோண விரதம் என்பது, திருவோண நட்சத்திரத்தோடுகூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். திருவோணம் என்பது 27 நட்சத்திரங்களில் ஒன்று. இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது. குள்ளமான சிறுவனின் ரூபத்தில் வந்து, மிகப் பெரிய உருவமாக வளர்ந்து, தேவர்களை காத்த பெருமாள் என்பதால் அவரை வழிபட்டால் நமக்கும் வளர்ச்சி தருவார் என்பது நம்பிக்கை. இந்த விரதம் சந்திர தோஷத்தை நீக்கி, வாழ்வில் நன்மைகள் தருவதாக சொல்லப்படுகிறது. காலை பெருமாள் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்க வேண்டும். மதிய உணவில் உப்பை சேர்க்காமல் சாப்பிட வேண்டும். மாலை, சந்திர தரிசனம் காண வேண்டும்.