வைகாசி மாத வைகாசி விசாகம்:

       முருகன் பிறந்த நாளை வைகாசி விசாகமாக கொண்டாடப்படுகிறது. அதாவது சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு உருவமாக முருகன் அவதரித்த நாள் கார்த்திகை பெண்களை அழைத்து அவர்களிடம் ஆறு குழந்தைகளையும் ஒப்படைத்த பின் ஆறு உருவத்தையும் ஆறு முகத்துடன் ஒரே உருவமாக்கிய தினம். 17 நட்சத்திரங்களில் விசாக நட்சத்திரம் முருகனுக்கு உரியது. ஜோதிடப்படி விசாக நட்சத்திரத்திற்கு அதிபதியான குரு பகவானும் செவ்வாய்க்குரிய முருகனின் தினமும் இன்று சேர்ந்து வருவதால் விசாகம் சிறப்பு பெறுகிறது. அத்துடன் எமதர்மனும் இன்று தான் அவதரித்தார் என்றம் கூறப்படுகிறது. இன்று திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது, முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது, தயிர் சாதம் மோர் பானகம் ஆகியவை ஏழைகளுக்கு தானம் செய்வது போன்றவையால் திருமண பேரு கிடைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இன்று காவடி தூக்குதல், பால்குடம் எடுத்தல், 48,27, 9,7, 3 என ஏதேனும் ஒரு நாட்கள் அளவுக்கு விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டியது கிடைக்கும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கடஹரா சதுர்த்தி:

மாத திருவோண விரதம்:

சரஸ்வதி பூஜை என்றால் என்ன?