திருநகர் உச்சி கருப்பணசாமி கனிமாற்றுதல்:

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு கனிமாற்று திருவிழா மாலை 5 மணிக்கு மேல் இரவு எட்டு மணி வரை கனி மாற்றி வேண்டுதல் செலுத்துதல் நடைபெறுகிறது. அதாவது வேண்டுதல் எதாவது வைத்திருந்து அது நிறைவேறும் பட்சத்தில் இங்கு அதிகபட்ச வேண்டுதலான கனி மாற்றுதல் மூலமாக செய்து தங்களது காணிக்கையை செலுத்துகின்றனர். உச்சி கருப்பணசாமி கோயிலில் சிறப்பு ஆண்கள் மட்டுமே வணங்கக்கூடிய கோவில். இங்கு கனி மாற்றுதல் என்பது தேங்காய் உடைத்து வாழைப்பழம் படைத்து வணங்கி முடித்து பின்பு அந்த வாழைப்பழத்தை அங்கு உள்ள ஜீவராசிகளான மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் கொடுக்கப்படும். அத்துடன் கோவிலுக்கு வந்துள்ள பிறர்க்கும் தானம் செய்யப்படும். இங்கு இரண்டு தூண்களுக்கு நடுவே ஆளுயர அரிவாளுடன் பல மணிகள் கட்டப்பட்டிருக்கும் இதுவே உச்சி கருப்பணசாமி. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கடஹரா சதுர்த்தி:

மாத திருவோண விரதம்:

சரஸ்வதி பூஜை என்றால் என்ன?