சனி வாராகி அம்மன் வழிபாடு:
வாரம் தோறும் வரும் சனிக்கிழமை அன்று வாராகி அம்மனை வழிபட்டா ல் முடிந்து போன உங்களுடைய வாழ்க்கை மீண்டும் நல்லபடியாக தொடர ஆரம்பிக்கும்.
ஒரு சில வாரங்களில் உங்களுடைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிடித்து வைத்து அதை வராகி என்று நினைத்து வழிபாடு செய்தால் போதும். மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் பத்து வெண் கடுகுகளை போட்டு, தீபம் ஏற்றி பூஜையறையில் வைத்து விடுங்கள்.நைவேதியமாக ஒரு டம்ளர் பானகம் வைத்தால் கூட போதும்.
சனி ஹோரையில் இந்த தீபத்தை ஏற்றி வராகி அம்மனுக்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள்.