இரத்த தானம்- ஜுன் 14:
தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம். இன்று ரத்தம் தானம் செய்யும் தினமாக கொண்டாடப்படுகிறது.
இரத்த தானம் என்பது ஒரு தன்னலமற்ற செயலாகும். விபத்து ஏற்பட்ட வர்களுக்கும், நோய்வாய் பட்டவர்களுக்கும் ரத்த தானம் மூலம் உயிரை காக்க முடியும்.சுகாதார அமைப்பிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரத்த தானம் உடலில் தேவையற்ற கொழுப்புச்சத்துக்களை குறைக்க உதவுகிறது. புற்றுநோய் உருவாக கூடிய சாத்திய கூறுகளை இரத்த தானம் குறைக்கிறது. இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இரத்த தானம் பெரிதும் உதவுகிறது. இரத்த தானம் செய்த உடன் முளைக்கீரை, பீன்ஸ், உலர் திராட்சைகள், முக்கியமாக சிட்ரஸ் வகையைச் சேர்ந்த ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். இதனால் வரும் மயக்கும் தலைவலி வாந்தி போன்றவற்றை தவிர்க்கலாம்.