சித்ரகுப்தன் விரதம் என்றால் என்ன?
சித்ரகுப்தன் விரதம்
இன்று சித்ரா பௌர்ணமி. மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை மிகத் துல்லியமாக எழுதும் பணியை வெகு சிறப்பாகச் செய்து வருபவர் சித்ரகுப்தர். அவர் அவதரித்த நாள் என்பதால் சிறப்பு வாய்ந்த நாளாக போற்றப்படுகிறது.ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. இந்த நாள் பெண்கள் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய ஆகம கடமைகளையும் செய்ய வேண்டிய நாள். மாங்கல்ய பலம் பெறும் நாள். இன்றைய தினம் சித்ரகுப்தரை வழிபட்டால் மனோபலமும் ஆயுள் பலமும் கைகூடி வரும்.இந்திரன் பாவ விமோசனம் வேண்டி அனைத்து சிவஸ்தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், மதுரை சொக்கநாரைத் தரிசித்து பாவ விமோசனம் பெற்ற புண்ணிய நாள் சித்ரா பவுர்ணமி நாளில்தான்.