இடுகைகள்

சித்ரகுப்தன் விரதம் என்றால் என்ன?

படம்
சித்ரகுப்தன் விரதம்   இன்று சித்ரா பௌர்ணமி. மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை மிகத் துல்லியமாக எழுதும் பணியை வெகு சிறப்பாகச் செய்து வருபவர் சித்ரகுப்தர். அவர் அவதரித்த நாள் என்பதால் சிறப்பு வாய்ந்த நாளாக போற்றப்படுகிறது.ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. இந்த நாள் பெண்கள் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய ஆகம கடமைகளையும் செய்ய வேண்டிய நாள். மாங்கல்ய பலம் பெறும் நாள். இன்றைய தினம் சித்ரகுப்தரை வழிபட்டால் மனோபலமும் ஆயுள் பலமும் கைகூடி வரும்.இந்திரன் பாவ விமோசனம் வேண்டி அனைத்து சிவஸ்தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், மதுரை சொக்கநாரைத் தரிசித்து பாவ விமோசனம் பெற்ற புண்ணிய நாள் சித்ரா பவுர்ணமி நாளில்தான்.

இரத்த தானம்- ஜுன் 14:

படம்
தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம். இன்று ரத்தம் தானம் செய்யும் தினமாக கொண்டாடப்படுகிறது. இரத்த தானம் என்பது ஒரு தன்னலமற்ற செயலாகும். விபத்து ஏற்பட்ட வர்களுக்கும்,  நோய்வாய் பட்டவர்களுக்கும் ரத்த தானம் மூலம் உயிரை காக்க முடியும்.சுகாதார அமைப்பிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரத்த தானம் உடலில் தேவையற்ற கொழுப்புச்சத்துக்களை குறைக்க உதவுகிறது. புற்றுநோய் உருவாக கூடிய சாத்திய கூறுகளை இரத்த தானம் குறைக்கிறது. இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இரத்த தானம் பெரிதும் உதவுகிறது. இரத்த தானம் செய்த உடன் முளைக்கீரை, பீன்ஸ், உலர் திராட்சைகள், முக்கியமாக சிட்ரஸ் வகையைச் சேர்ந்த ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். இதனால் வரும் மயக்கும் தலைவலி வாந்தி போன்றவற்றை தவிர்க்கலாம்.

சரஸ்வதி பூஜை என்றால் என்ன?

படம்
சரஸ்வதி பூஜை இன்று"மகா நவமி"புரட்டாசி 15ஆம் தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வியென்னும் அறிவிச்செல்வம் அளிக்கும் சரஸ்வதி கடவுளுக்கு மரியாதை செலுத்தும் தினம்.  இந்த தொழில் செய்பவர்களுக்கும் முக்கியமான தினம் அத்துடன் ஆயுதங்கள் செய்பவர்களுக்கும் உரிய நாள்.  அதனால் தான் அவர்கள் தங்கள் உபகரணங்களை அன்று கடவுள் முன்னே வைத்து வணங்குகின்றனர். இந்த நாள் ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிக்கும் புத்தகங்களை வைத்து வணங்குவார்கள். இன்று கல்விக்கு சிறந்த நாள் என்பதால் பள்ளி படிப்பினை தொடங்க தங்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் ஒரு வாய்ப்பு இன்று இருக்கும். எந்த படிப்புகளையும் இன்று துவங்கலாம்.

கல்லூரி படிப்பு:

.         பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து விடுமுறைக்கு பின்னர் மாணவர்கள் கல்லூரியில் சேர உள்ளனர். மகிழ்ச்சியிடன் வரவேற்க கல்லூரி கோளும் தயார் நிலையில் உள்ளது. கல்லூரியில் கலைநிகழ்ச்சிகள் அதிகம் இருக்கும். கல்லூரி நூலகங்களில் பல துறைகள் சாா்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள், பருவ இதழ்கள், இன்னும் பல இருக்கின்றன. மூன்று ஆண்டுகள் நூலகத்தை நல்ல முறையில் உபயோகப்படுத்தி மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்குத் தயாா் ஆகலாம். வகுப்புகளை முடித்து மீதி நேரங்களில் ஜாவா, டாலி போன்ற கணினி பயன்பாட்டுப் பாடங்கள் பயில்வது, ஆங்கிலப் பேச்சாற்றலை வளா்க்கக் கூடிய பயிற்சிகள் மேற்கொள்வது போன்றவற்றில் ஈடுபட வேண்டும். வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்கள் மாணவா்களிடம் எதிா்பாா்ப்பது ஏதாவது ஓா் இளங்கலை பட்டத்துடன் ஆங்கிலத்தில் பேசக் கூடிய ஆற்றல் சக ஊழியா்களை அனுசரிக்கும் தன்மை, பொறுப்புடன் பணிகளை செய்து முடிப்பது, எனவே தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.